தமிழ்நாட்டில் அனைத்து அம்மன் கோயில்களிலும் (ஆடி 18) நாளை ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து அம்மன் கோயில்களிலும் பெண்கள் விரதமிருந்து தனது தாலி கயிற்றினை மாற்றிக் கொள்வது வழக்கம். மேலும் இந்த நாளில் தொடங்கும் தொழில் பல மடங்கு பெருகும் என ஐதீகம். இந் நிலையில் சென்னை- நாகர்கோயில், சென்னை- திருச்சி இடையே சிறப்பு ரயில்கள அறிவிக்கப்பட்டுள்ளன.
நாளை முதல் 2 நாட்கள் வார விடுமுறை என்பதால் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சனிக்கிழமை ஆடிப்பெருக்கு விழா மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவையிலிருந்து மதுரை, ராமேஸ்வரம் ,தேனி ,திருச்சி, சேலம் போன்ற ஊர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக 60 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.