ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேர் விழா! ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடிப்பூர தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஜூலை 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அக்கோயிலில் ஆகஸ்ட் 3ஆம் தேதி கருட சேவையும், 5-ஆம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது .அதன் பின்பு ஆகஸ்ட்- 7ஆம் தேதி ஆடித்தேரோட்ட விழா கொண்டாடப்பட உள்ளது.
இத்திருவிழாவின் சிகர நிகழ்வான ஆடிப்பூரத் தேரோட்டம் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 9.05 மணிக்கு நடைபெறுகிறது. இத் தேரோட்டத்தின் போது பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஸ்ரீஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் காட்சியளிப்பார் .இந்தத் தேரோட்டத்தைக் காண்பதற்காக கோடிக்கணக்கான பக்தர்கள் கூட்டம் கூடும். எனவே இக்கோயிலில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு 12 நாட்களும் போலீசார் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.