மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் கர்ப்பிணி பெண்கள் உட்பட 8 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஜிகா வைரஸ் கொசுக்களால் பரவக்கூடிய நோயாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஜிகா வைரஸ் நோயானது கர்ப்பிணி பெண்களுக்கு அதிகளவில் பரவக்கூடிய வகையாக உள்ளது. இந்த நிலையில் காய்ச்சல், தோல் வெடிப்பு, தலைவலி, மூட்டு வலி என 7 நாட்கள் நீடித்தால் மக்கள் மருத்துவரை அணுகவும் எனத் தமிழகத்தின் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.
மகாராஷ்டிரத்தில் ஜிகா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் அத்தகைய பாதிப்பு இல்லை என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை நிலையங்களிலும் பள்ளிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.