மதுரையில் மெட்ரோ ரயில் நிலைய துவக்க பணிகள் தொடங்கப்படுகின்றன. சென்னை அடுத்ததாக மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம் துவக்கப்படும் என 2021 இல் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மதுரை திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலும் 31 கிலோமீட்டர் தொலைவில் மெட்ரோ ரயில் நிலைய வழித்தடம் அமைக்கப்படுகிறது.இந்தத் திட்டத்தில் 27 ரயில் நிலையங்களில் 3 ரயில் நிலையங்கள் சுரங்க பாதையில் அமைய உள்ளது.
மதுரை ரயில் நிலையம் பெரியார் பேருந்து நிலையத்திற்கு ஒன்றாகவும் மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கோரிப்பாளையத்தில் இரண்டு என மொத்தம் மூன்று சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன .இதற்காக 11 ,360 கோடிரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் நிலையம் விரிபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது .மேலும் இதற்கான பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் மத்திய அரசின் ஒப்புதலின் படி மதுரையில் மெட்ரோ ரயில் நிலையைப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.