தேனி மாவட்டம் சுருளி ஆற்றில் யானை நடமாட்டம் காரணமாக குளிக்கத்தடை!

தேனி மாவட்டம் சுருளி ஆற்றில் யானை நடமாட்டம் காரணமாக குளிக்கத்தடை!

தேனி மாவட்டம் சுருளி ஆற்றில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரங்களாக கேரள மாநிலத்தில் பரவலான மழை பெய்து வருகிறது. கேரளா அதன் அருகில் உள்ள தேனி மாவட்டத்தின் சுருளி ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி ஆற்றின் அருகே உள்ள சுற்றுவட்டாரம் வனத்துறை பகுதிகளாக அமைந்துள்ளது.

பகுதியில் காட்டு விலங்குகளான யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வாழ்கின்றன. அப்பகுதியின் மழைப்பொழிவு காரணமாக யானைகள் நடமாட்டம் சுருளி ஆற்றின் அருகே அதிகளவில் காணப்படுவதால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் சுருளி ஆற்றுக்குச் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related post