அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதி அமைந்துள்ளது. கடந்த வாரங்களாகப் பெய்த கனமழை காரணமாக அசாம் மாநிலத்திலும் பிரம்மபுத்திரா நதியின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் பிரம்மபுத்திரா நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 33 ஆயிரம் குழந்தைகள் உள்பட 1.34 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காமரூப், கரீம்கஞ்ச், தேமாஜி, திப்ருகர், தின்சுகியா, லக்கிம்பூர் உள்பட ஏழு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினரால் 71 நிவாரண முகாம்களில் 11 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.