இந்தியாவில் 543 தொகுதிகளில் 291 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்றவை 18 முன்னிலை பெற்றுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்துள்ளது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் .மேலும் திமுக கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டாடினர்.