இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நீட் நுழைவு தேர்வில் இந்தியா முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்த நீட் தேர்வுக்கான முடிவுகளை நேற்று (ஜூன்-5) மாலை தேசிய தேர்வாணையம் வெளியிட்டது.அதில் 13,16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் அதாவது 56.41% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டதில் இளநிலை தேர்வு முடிவுகளில் 13, 16, 268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள் .
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில் நாடு முழுவதும் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளனர். இந் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் நீட் தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். எனவே இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்தினையும் பிடித்துள்ளது.