உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் மே 31 இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில்1987 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு WHA40.38 தீர்மானத்தை நிறைவேற்றியது, ஏப்ரல் 7, 1988 ஐ “உலகப் புகைபிடிக்காத நாள்” என்று அழைக்கப்பட்டது.. 1988 ஆம் ஆண்டில், தீர்மானம் WHA42.19 நிறைவேற்றப்பட்டது. இது ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.புகையிலை பயன்பாட்டால் மனிதர்களுக்குப் புற்று நோய் ஏற்பட்டு அவர்களின் வாழ்வியல் பாதிப்படைகிறது. புகையிலையைப் பயன்படுத்துவதால் ஒவ்வொரு ஆண்டிலும் 60 லட்சம் மனிதர்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந் நிலையில் புகையிலையால் ஏற்படும் பாதிப்பைக் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்காக புகையிலை எதிர்ப்பு நாள் மக்களிடையே இன்று அனுசரிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்புடன் மக்களும் இணைந்து செயல்பட்டால் புகையிலையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோய் முற்றிலும் இல்லாத நாடாக நம் நாடு மாற வழி வகுக்கும்.