தமிழக பள்ளிக் கல்வித்துறை மேலாண்மை தகவல் முகமை EMIS என்ற ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த இணையதளத்தில் மாணவர்களின் பிறந்த தேதி, வகுப்பு, மாணவர்கள் மதிப்பெண்கள் சான்றிதழ்கள், கற்றல் மதிப்பீடு ,கற்பித்தல் நடவடிக்கை உள்ளிட்ட விபரங்கள் இணையதளம் வாயிலாக சேகரிக்கப்படுகின்றன.
அதே பெற்றோர்களின் மொபைல் எண்கள் இணையதளத்தோடு இணைக்கப்பட்டு வருகின்றன. எனவே பள்ளிக்கல்வித்துறை சார்பாக மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்னை பெற்றோர்கள் ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும் எனக் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.