தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தின் ‘சின்ன குற்றாலம்’ என்று அழைக்கப்படுகிறது. கோடை விடுமுறை நாட்களில் கும்பக்கரை அருவிக்குச் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக தேனி மாவட்டத்தில் கனமழை பெய்ததால் இந்த அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. இந் நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு இரண்டு நாட்களுக்குக் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீராகியுள்ளது. எனவே (மே 15 )இன்று முதல் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி என்று தேனி மாவட்டத்தின் வனத்துறை சார்பாக டேவிட் ராஜ் என்பவர் அறிவிப்பினைத் தெரிவித்துள்ளார்..