உதகையில் கோடை விழா ஆரம்பம் ஆகிறது. உதகையில் 126 -ஆவது மலர்க்கண்காட்சி ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறும். இந்த வருடம் நீலகிரி மாவட்டம் உதகையில் மலர்க்கண்காட்சி மே 17ஆம் தேதி முதவ்22ஆம் தேதி வரை நடைபெறும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது .
தற்போது வெயிலின் அதிகரிப்பு காரணமாக உதகையில் 126- ஆவது மலர்க்கண்காட்சி தேதி மாற்றம் செய்யப்பட்டு (மே மாதம் 10 ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நாட்கள் நடைபெறும்) என்று மாவட்ட தலைவர் அருணா அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64ஆவது பழக்கண்காட்சி நடைபெற உள்ளது. மேலும் குடிநீர் வசதி, இருப்பிட வசதி அனைத்து தேவையான வசதிகளும் தோட்டக்கலைத் துறையினரால் சுற்றுலாப் பயணிகளுக்குச் செய்து தரப்படுகிறது .