கும்பகோணம் ராமசாமி கோயிலில் ராமநவமி விழா கோலாகலம்!

கும்பகோணம் ராமசாமி கோயிலில் ராமநவமி விழா கோலாகலம்!


தமிழகத்தில் அயோத்தி என்று அழைக்கப்படும் கும்பகோணம் ராமசாமி கோயில் மிகப் புகழ் பெற்ற பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோயிலில் ராம நவமி விழா 11 நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்தக் கோயிலில் ராமாம நவமி விழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராம பிரான், சீதாதேவி , லட்சுமணர், அனுமன் என அனைத்து தெய்வங்களும் தங்கக்கொடி மரத்தில் எழுந்தருளித்தனர். இந்த விழாவில் நான்காவது நாளான ஏப்ரல் 12-ஆம் தேதி ஓலை சப்பரத்தில் தங்க கருட சேவையும் , ஒன்பதாவது நாளான ஏப்ரல்-17-ஆம் தேதி ராம நாமி விழா கொண்டாடப்படும் நாளில் திருத்தேராட்டமும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

மேலும் ஏப்ரல் 21ஆம் தேதி ராமபிரான் சீதாதேவி திருக்கல்யாணம் சேவையும் புஷ்ப விமான புறப்பாடும் நடைபெறும். எனவே ராம நவமி விழாவை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

Related post

கும்பகோணம்  நாகநாதசுவாமி கோயில் திருத்தேரோட்டம் கோலாகலம்!

கும்பகோணம் நாகநாதசுவாமி கோயில் திருத்தேரோட்டம் கோலாகலம்!

கும்பகோணம் நாகநாத சுவாமி கோவிலில் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் ஸ்ரீ ராகு பகவான் திருமண கோலத்தில் நாகவல்லி, நாககன்னி உடன் அருள் பாலிக்கிறார். இத்தளத்தில் ராகு…