ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகர் கோயிலில் பங்குனி உத்திரம் மார்ச் 18ஆம் தேதி ஆரம்பமாகிறது. பங்குனி உத்திர நாளில் முருகப்பெருமானை விரதமிருந்து பக்தர்கள் வழிபடுவர். பங்குனி மாத பௌர்ணமியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த நாளே பங்குனி உத்திரமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து முருகர் கோயில்களிலும் பிரம்மமோற்சவம், தேர் இழுப்பது, காவடி எடுப்பது, பால் அபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெறும்.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி முருகர் கோயிலில் மார்ச் 18 ஆம் தேதி முதல் மார்ச் 27ஆம் தேதி வரை பங்குனி உத்திர திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.மார்ச் 23ஆம் தேதி திருக்கல்யாணமும் முத்துக்குமாரசாமி -வள்ளி தெய்வானை அவர்களின் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 23-ஆம் தேதி தேரோட்ட நிகழ்ச்சியும் ,முருகப்பெருமான் காமதேனு, மயில்வாகனம், யானை, தங்கமயில் வாகனம் தங்கக் குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.மார்ச் 27 ஆம் தேதி கொடி இறக்குதலுடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைகிறது. இந்நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளைப் பழனி முருகர் கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர். பங்குனி உத்திர நாளன்று முருக பக்தர்கள் விரதமிருந்து முருகனின் அருளினைப் பெறுவர்.