தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தில் பயன் பெறுவதற்காக புதிய ரேஷன் கார்டுகளைப் பெற 45,509 விண்ணப்பித்திருந்தனர். கடந்த சில மாதங்களாக மகளிர் உரிமைத் தொகை , மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை வழங்குதல் போன்ற காரணங்களால் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது .
இந் நிலையில் புதிதாக ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்களுக்குப் புதிய அட்டைகளை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. புதிதாக ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்த 45,509 பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.எனவேபுதிய ரேஷன் அட்டை வேண்டி விண்ணப்பத்தவர்களின் பொது விநியோக திட்டத்திலிருந்து தொலைபேசிகளில் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டால் உடனடியாக ரேஷன் அலுவலகத்திற்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.