பொங்கல் பண்டிகை முன்னிட்டு மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி, நடைபெற்றது . போட்டியில் 1200 காளைகளும் 700 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.இதில் 18 காளைகளைப் பிடித்த முதலிடம் பெற்ற கருப்பாயூரணி கார்த்திக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பூவந்தி அபி சித்தருக்குப் பைக் பரிசாக வழங்கப்ட்டது. தொடர்ந்து சீறிப்பாய்ந்த காளைகளுக்காக திருச்சி வேலூர் குணாவின் காளை கட்டப்பா முதல் பரிசு வழங்கப்பட்டது .மதுரை காமராஜபுரம் வெள்ளை காளை சௌந்தருக்கு இரண்டாவது பரிசு வழங்கப்பட்டது. இந்தப் போட்டியை காண்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஜய் டிவி பிரபலமான கோபி கோபிநாத் புகழ் எனப் பலர் வருகை தந்து இருந்தனர்.
மேலும் வெளிநாடுகளிலிருந்தும் பலர் நமது பாரம்பரிய உடைஅணிந்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு வருகை தந்திருந்தனர். இந்தப்போட்டியில் உதயநிதி ஸ்டாலின் “யாருக்கும் எந்தவித விபத்தும் ,பாதிப்பும் ஏற்படாத அளவுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மதுரை ஜல்லிக்கட்டு போட்டியானது 10 சுற்றுகள் நடைபெற்று இன்று நிறைவடைந்துள்ளது.