19 ஆவது ஆண்டு சுனாமி நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக எழுந்த சுனாமி பேரலைத் தமிழகத்தில் கடலோரப் பகுதிகளைத் தாக்கியதில் பல்லாயிரம் கணக்கான மக்கள்கள் உயிரிழந்தனர். தமிழகத்தில் சென்னை, புதுச்சேரி, நாகை ,கடலூர், ராமநாதபுரம் ,தூத்துக்குடி, கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் மக்கள் சுனாமி பேரலைகளில் சிக்கி உயிரிழந்தனர்.
எனவே ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமியில் உயிரிழந்தவர் நினைவு கூறப்படுகிறார்கள்.எனவே தமிழகத்தில் 19 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு சுனாமி பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.