மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை பெரு நகரத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. .இதனால் சென்னையில் உள்ள அனைத்து குடும்பத்தார்களுக்கும் 6000 நிவாரணத் தொகை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வெள்ள நிவாரணத் தொகை மூன்று பிரிவுகளாக வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னையில் நிவாரண நிதிக்காக டோக்கன்கள் அனைத்து பகுதிகளிலும் வழங்கப்படுகின்றன.
ரேஷன் அட்டைதாரர், புதிதாக ரேஷன் அட்டை விண்ணப்பித்தோர்க்கு நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் சென்னையில் பல ஆண்டுகளாக வசித்து வருபவரின் ஆதார் அட்டை,வாக்காளர் அடையாள அட்டை ,வீட்டு வாடகை ஒப்பந்தம், கேஸ் பில், எலக்ட்ரிக் பில் உள்ளிட்டவை ஆவணங்கள் மூலம் டோக்கன்கள் வழங்கப்படும். இந்த டோக்கன்கள் டிசம்பர் 16 முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை வழங்கப்படும் என இளைஞர் நல விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.