இந்தியாவில் உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1-ஆம் தேதி இன்று கடைபிடிக்கப்படுகிறது .எச் ஐ வி, எய்ட்ஸ் நோயால் பாதிப்பு மற்றும் அதனை தடுக்கும் முறை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி எய்ட்ஸ் நோயால் 4 கோடி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்த உயிர்கொல்லி தொற்று நோயை தடுப்பதற்காக இன்று பல்வேறு மாநிலங்களில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் மனிதநேயத்துடனும், அரவணைப்புடனும் நடந்து சமமான வாய்ப்புகளை உறுதி அளிக்கவும் , எய்ட்ஸ் நோயை தடுப்பதற்காக விழிப்புணர்வுகளை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும் இன்று உலக எய்ட்ஸ் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் 2030 ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோய்க்கு முடிவுக்கு கொண்டு ஐக்கிய நாடுகள் இலக்கு நிர்ணயத்து வருகின்றன. மேலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் எய்ட்ஸ் நோய் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம் என தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.