சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற (2024) ஜனவரி 15ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலுக்கு கார்த்திகை மாதம் என்பதால் கடந்த 16ஆம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டு திறக்கப்பட்டு 2 லட்சத்திற்கு மேலான பக்தர்கள் வந்துள்ளனர். சென்ற வருடங்களில் ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி பைககளுடன் பக்தர்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் வைத்திருக்கும் இருமுடி பைகளின் தேங்காய்களில் உள்ள நெய்களால் எளிதில் தீப்பிடிக்கும் தன்மையாக இருப்பதால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது .
இந்த நிலையில் தற்போது ஜனவரி 15ஆம் தேதி வரை பக்தர்கள் ஐயப்பன் கோயில் சாமியே தரிசிக்க இருமுடிப் பைகளுடன் விமானத்தில் பயணம் செய்யலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது மேலும் முறையான பாதுகாப்புடன் சோதனைகள் மேற்கொண்ட பிறகு விமானத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது