புது டெல்லியில் பிரதமர் மோடி பாஜக தலைமையகத்தில் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசிய போது”செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சமீப காலமாக அதிக அளவில் வளர்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு கல்வி வளர்ச்சிக்கு பயன்பட்டாலும் ,சில சமூக ஊடகங்கள் இதை ‘deepface’ என்ற முறையில் பல தவறுதலான வீடியோக்களைப் பயன்படுத்துகின்றன. இந்நிலையில் போலியான deep face வீடியோக்கள் பலரிடையே பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. இந்தத்தொழில்நுட்பம் குறித்த புரிதலை பொதுமக்களிடையே விழிப்புணர்வாக கொண்டு வர வேண்டும் என்று பிரதம மோடி தெரிவித்தார்.
மேலும் இதை பொதுமக்கள் நம்பக்கூடாது என்றும் தெரிவித்தார்.டீப் பேக் தொழில்நுட்பம் மூலம் போலியான வீடியோக்களை உருவாக்கி, சமூக வலைதளங்களில் பரப்பினால், குற்றவாளிகளுக்கு ரூ. 3 லட்சம் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அளிக்கப்படும் என்பதையும் தெரிவித்தார். மேலும் சமூக ஊடகங்களில் பணி புரியும் 40 வயதை தாண்டிய செய்தியாளர்களிடம் தனது உடல் நலனை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், இது தொடர்பாக மக்கள் இடையே சமூக ஊடகங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.