தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 13-ஆம் தேதியும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்கும்படி சென்னை மாநகர காவல் துறை அறிவுரை வழங்கியுள்ளது.. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி காலை 6 மணி முதல்7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும், பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும் ,பட்டாசு வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெபிசல் மேலாக அதிக ஓசை எழுப்பக் கூடிய வகை பட்டாசுகளை வெடிக்க கூடாது என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது .
வாகனம் நிறுத்தும் இடம், பெட்ரோல் நிலையம், போன்ற இடங்களிலும் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்றும் குறிப்பாக பெரியவர்கள் குழந்தைகளை எந்தவித பாதுகாப்புமின்றி தனியாக பட்டாசு வெடிக்கு அனுமதிக்க கூடாது என்று காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் தீபாவளியைக் கொண்டாடும்படி சென்னை பெருநகர காவல்துறை சந்திப் ராய் ரத்தோர் தலைமையில் காவல்துறைசார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.