தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையை தமிழக அரசு வழங்குகிறது.. கரும்பு விவசாயிகளுக்கான ரூபாய் 253.70 கோடி ஊக்கத்தொகை வழங்குவதாக தமிழக அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை தமிழக வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கரும்பு சாகுபடி உற்பத்தியில் சர்க்கரை ஆலைகளுக்கு அரவை பருவத்திற்காக கரும்பு பதிவு செய்து வழங்கிய விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகையை தமிழக அரசு வழங்குகிறது.
கரும்பு உற்பத்தியை அதிகரிக்கவும் , நலிவடைந்த சர்க்கரை ஆலைகளுக்கான சர்க்கரையை உற்பத்தியை அதிகரிக்கவும், மேலும் சர்க்கரை ஆலைகளில் 2022- 23 ஆண்டுகளில் அரவை பருவத்திற்காக கரும்பு வழங்கிய விவசாயிகளுக்காக சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 1.42 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவர் என்று வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.