தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளில் நீட் மற்றும் ஜே இ இ நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். தமிழக அரசு பள்ளிகளில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 4 மணி முதல் 5:30மணி வரை நீட் பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மருத்துவ படிப்பினை படிக்க விருப்பமுள்ள மாணவர்கள் பயிற்சி வகுப்புகளில் பயிலலாம் என்றும்,. மாணவர்கள் யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்றும் தமிழக அரசு அதிரடி உத்தரவை தெரிவித்துள்ளது. ஜே இ இ ,நீட் போன்ற நுழைவு தேர்வு களுக்காக பள்ளிகளின்அனைத்து வேலை நாட்களிலும் பாடவாரியாக பயிற்சிகள் அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்துள்ளது.
மேலும் அரையாண்டு தேர்வு ,முழு ஆண்டு தேர்வு விடுமுறை நாட்களில் வட்டார அளவில் நீட், ஜே இ இ நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.