தமிழ்நாடு முழுவதும் மாஞ்சா நூலுக்குத் தடை விதித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.. தமிழ்நாட்டில் மாஞ்சா நூலை தயாரிக்கவும், பயன்படுத்தவும் தமிழக அரசு தடை செய்துள்ளது. காத்தாடி விடுவதற்காக பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல்கள் கண்ணாடி துகள்கள், பிளாஸ்டிக் நைலான் பொருட்கள் கொண்டு விஷம் நிறைந்த வேதிப்பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது.. இந்தச் செயற்கை நூலால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த வகையான அபாயகரமான மாஞ்சா நூலினால் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் பாதிக்கப்படுகின்றனர். சில சமயங்களில் உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன.
இதனால் பல்வேறு தரப்பினர் மாஞ்சா நூலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் தமிழக அரசிடம் வைத்திருந்தனர். இந்நிலையில் அக்டோபர் 30-ஆம் தேதி மாஞ்சா நூலினை தயாரிக்கவும் ,விற்பனை செய்யவும், கொள்முதல் ஏற்றுமதி செய்யவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.இந்தத் தடை உத்தரவை மீறுபவர்களுக்கு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.”என்று தமிழக அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.