தமிழ்நாட்டில் அரசு அலுவலர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அகவிலைப்படி 4 % உயர்த்தப்பட்டுள்ளது .இதே போன்று தமிழ்நாட்டிலும் அரசு ஊழியர்களுககு 4%அகவிலைப்படி சம்பளம் உயர்த்தப்படுகிறது.. தற்போது அரசு ஊழியர்களுக்கு 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக அகவிலைப்படி சம்பளம் உயர்த்தப்படுகிறது என்று தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த சம்பள உயர்வானது 2023 ஜூலை மாதத்திலிருந்து கணக்கிடப்பட்டுத் தீபாவளிக்கு போனஸ் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் 16லட்சம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், ஓய்வூதியர்களும் பயன் பெறுகின்றனர், மேலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அவர்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..