இந்தியாவில் பிரதமர் மோடி 51,000 இளைஞர்களுக்கு ‘ரோஸ்கர் மேளா’ திட்டத்தின் மூலம் மத்திய அரசின் பணி நியமன ஆணையை காணொளி வாயிலாக இன்று வழங்கியுள்ளார். அதன்படி சென்னை எழும்பூரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரோஜ்கர் மேளா திட்டத்தினை (செப்டம்பர்26.2023) இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 533 தமிழர்களுக்கு மத்திய அரசின் பணி நியமன ஆணையை வழங்கி உள்ளார். தொடர்ந்து தமிழர்கள் அனைவரும் மத்திய அரசின் பணியில் அமர்வதற்காக தேர்வுகளை எழுதி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.
இதைதொடர்ந்து நிர்மலா சீதாராமன் தேர்ந்தெடுக்கப்பட்ட 533 தமிழர்களுடன் கலந்துரையாடி” எந்தவித ஊரிலும் பணியாற்றுவதற்காக தமிழக மாணவர்களை எல்லா மொழி வகைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். மேலும் 533 தமிழர்களுக்கும் மத்திய அரசின் பணி நியமன ஆணைய வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டு நிர்மலா சீதாராமன் தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்.