இந்தியாவில் இளம் விஞ்ஞானி சுவாதிக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான ஆராய்ச்சியில் தனது பங்களிப்பைச் செய்து சாதனை படைத்ததற்காக Norman Borlaug சர்வதேச விருதினை வழங்கப்பட உள்ளது . IRRI அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய இவர் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இதுவரை விஞ்ஞானி சுவாதி ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் விவசாயிகளுடன் இணைந்து 500- க்கும் மேற்பட்ட அரிசி வகைகளைக் கொண்டு பத்தாயிரம் நிலங்களில் பயிரிட்டு ஆராய்ச்சி நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான ஆராய்ச்சியில் ஆண்டுதோறும் Norman Borlaug நிறுவனமானது விருது வழங்கி வருகிறது. இந்த வருடம் 2023 சர்வதேச அளவில் இந்திய இளம் பெண் விஞ்ஞானி சுவாதிக்கு வேளாண் தொழிலில் சாதனை படைத்ததற்காக சர்வதேச விருதுக்கு தேர்வாகியுள்ளார். எனவே ஒரிசா மாநிலத்தின் முதலமைச்சர் நவீன் பட்நாயகர் வேளாண் விஞ்ஞானி சுவாதிக்கு வாழ்த்தினைத்தெரிவித்துள்ளார்.