தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 தடகள வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கின்றனர் ஆசிய விளையாட்டுப் போட்டியானது சீனாவில் (செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 8 தேதி வரை )நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்காக ஆசிய நாட்டில் பல நாடுகள் பங்கேற்று பல்வேறு பிரிவுகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் 65 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெஸ்வின் அல்ட்ரின், பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் குமார், ஆரோக்கியா ராஜுவ், ராஜேஷ் ரமேஷ், பவித்ரா வெங்கடேஷ், நித்யா ராமராஜ், வித்யா ராம்ராஜ், சுபா வெங்கடேஷ், அருள் ராஜலிங்கம் போன்ற10 தடகள வீரர்களும் தேர்வாகியுள்ளனர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணியின் சார்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 தடகள வீரர்கள் தேர்வாகி பெருமை சேர்த்துள்ளனர்.