தமிழ்நாட்டில் ஆடிப்பெருக்கு விழா – பக்தர்கள் சிறப்பு வழிபாடு. தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு விழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பக்தர்கள் அனைவரும் காவிரி ஆற்றங்கரையில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.தமிழ் மாதம் ஆடி பதினெட்டாம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தொடங்கும் தொழிலோ,வாங்கும் பொருளோ 18 மடங்காக பெருகும் என்பது ஐதீகம். இந்நாளில் பெண்கள் தாங்கள் மாங்கல்ய கயிற்றை புதிதாக மாற்றி காவிரி அன்னையை வழிபடுவார்.
இந்த ஆடிப்பெருக்கு விழா தமிழ்நாட்டில் கருவூர், மயிலாடுதுறை, துலா கட்டம், சீர்காழி, திருவாரூர், கும்பகோணம், பக்வத் படித்துறை, பாலக்கரை, திருக்காட்டுப் பள்ளி மற்றும் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை ஆகிய இடங்களில், போன்ற மாவட்டங்களில் காவிரி நதி நீர் நிலைகளின் ஓரம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் புதுமண தம்பதியினர்கள் அரிசி, பழங்கள் எனப் படையலிட்டு மாங்கல்ய சிறப்பு பூஜைகளை காவிரி அன்னைக்கு வழிபாடு செய்தனர். தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.