ரேஷன் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கிடையாது –தமிழக அரசு உத்தரவு. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கிடையாது எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளான அன்று மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் வழங்கும் திட்டம் தமிழக அரசால் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்கான பணிகளை தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 1000 வழங்கும் திட்டத்திற்கான ரேஷன் கடைகள் மூலம் டோக்கன்கள், விண்ணப்பங்கள் பொது மக்களுக்கு வழங்கப்படுகின்றன. ரேஷன் கடைகள் மூலம் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான முகாம்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. எனவே தமிழக அரசின் நிர்வாகத்தின் பணியின் காரணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ரேஷன் கடை செயல்படும் எனத் தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த ஞாயிற்றுக்கிழமை பதிலாக அடுத்த மாதம் 26 ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.