காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு இரவு பாடசாலையை நடிகர் விஜய் தொடங்குகிறார்!

காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு இரவு பாடசாலையை நடிகர் விஜய் தொடங்குகிறார்!

காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு இரவு பாடசாலையை நடிகர் விஜய் தொடங்க உள்ளார். (ஜூலை 15) ஆம் தேதி தமிழகத்தின்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராசர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. எனவே அவர் பிறந்தநாளில் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் இரவு பாடசாலையைத் தொடங்கப் போவதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.    சமீபத்தில் ஜூலை 17ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு தொகையுடன் சான்றிதழையும் வழங்கினார். இதை தொடர்ந்து நடிகர் விஜய் தன் தொண்டர்கள் மூலம் நலத்திட்டங்கள் மற்றும் பல சமூக சேவைகளைச் செய்து வருகிறார்.

தற்போது  மாணவர்களுக்கான இலவச இரவு பாடசாலை திட்டத்தினை நடிகர் விஜய் தொடங்குகிறார்.இத்திட்டத்திற்கான இடம் ஏற்பாடு செய்வது ,அதற்கான வாடகை மற்றும் செலவு  போன்றவற்றை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வழங்கப்படும்.மேலும் மாணவர்களுக்கான இலவச இரவு பாடசாலை திட்டத்திற்காக ஆசிரியர்களைத் தேர்வு செய்ய மாவட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் 4 இடங்களில் மேலாக பாடசாலைகள் அமைக்கப்பட உள்ளது. பயிலகம்,கல்வியகம், அறிவொளியக்கம்,  போன்றவையாக தொடங்கபடும் என விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

தமிழக அரசின் தீர்மானத்தை வரவேற்கிறேன் -நடிகர் விஜய்!

தமிழக அரசின் தீர்மானத்தை வரவேற்கிறேன் -நடிகர் விஜய்!

 சென்னை திருவான்மியூரில் (ஜூலை 3) இன்று இரண்டாவது கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக…
விஜய் பிறந்தநாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக  பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தொடக்கம்!

விஜய் பிறந்தநாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக பொது மக்களுக்கு நலத்திட்ட…

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.விருகம்பாக்கம், ஆயிரம் விளக்கு, சேப்பாகம்-திருவல்லிக்கேணி பகுதியில் அன்னதானம், கோயம்பேடு ரோகினி திரையங்கம்…
தமிழக முழுவதும் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு -நடிகர் விஜய்

தமிழக முழுவதும் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு -நடிகர் விஜய்

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார் .இதை தொடர்ந்து பல அரசியல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு…