இந்தியாவின் வட மாநிலங்களில் கனமழையால் வெள்ள பாதிப்பு! இந்தியாவில் வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால், வெள்ள பாதிப்பு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இமாச்சலப் பிரதேசம் ,டெல்லி ,ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கி தென்மேற்கு பருவ மழையால் வட மாநிலங்களில் வரலாறு காணாத அளவிலும் மழை பெய்துள்ளது. டெல்லி, பஞ்சாப், இமாசலப் பிரதேச மாவட்டங்களில் தலா 112% 100% 70% என மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மலை பிரதேசமான இமாச்சலப் பிரதேசத்தில் சிம்லா, குலு, மண்டி பகுதிகள் மழையால் பாதிக்கப்பட்டு பாலங்கள் சாலைகள் சேதமடைந்துள்ளன. இமாச்சலப் பிரதேசத்தில் 13 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 9 இடங்களில் காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள் உடமைகள் அடித்து செல்லப்பட்டன.
மேலும் சில இடங்களில் உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளன. எனவே அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் தங்களை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளும் படி முதல்வர் சுக்வீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இமாச்சலப் பிரதேசத்தில் 3000, 4000 கோடி சேதம் அடைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.. எனவே முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இமாச்சலப் பிரதேசத்திற்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.