‘நமக்கு நாமே’ திட்டம் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது. நமக்கு நாமே திட்டத்திற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய்.100 கோடியை விடுவித்துள்ளார் . இதற்கான அரசாணை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு ‘நமக்கு நாமே’ திட்டம் தொடங்கப்பட்டது. 2023 -2024 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி பகுதிகளில் மக்களுக்கு தேவையான கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ‘நமக்கு நாமே’ திட்டத்திற்கு ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த 100 கோடி ரூபாயில் ஒதுக்கீட்டில் முதலில் 50 கோடி ரூபாய் கொண்டு அரசு பள்ளிகளில் வகுப்பறைகள், கழிப்பறைகள், ஆய்வகங்கள், மிதிவண்டி நிறுத்துமிடம் மற்றும் சுற்று சுவர் கட்டுதல், போன்ற கட்டுமான பணிகளை விரைந்து செயல்படுத்தப்படும்.
மேலும் அரசு விடுதிகள் கட்டுதல், உள் விளையாட்டரங்கள் அமைத்தல், சமுதாயக்கூடம் போன்ற கட்டுமான பணிகளையும் சிறந்த முறையில் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள 50 கோடி ரூபாயை இந்தப் பணிகள் செய்து கொண்டிருக்கும் பட்சத்தில் இதற்கான அரசாணை வெளியிடப்படும் என்ற தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது. ‘நமக்கு நாமே’ திட்டத்தினை கொண்டு ஊரகப் பகுதிகளின் வாழும் மக்களின் பயன்பாட்டிற்காக மொத்தம் ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு தமிழக அரசு செய்துள்ளது.