வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி வரவேற்பு. சர்வதேச யோகா தினத்திற்காக ஜூன் 21ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா ஐ.நா சபையின் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்றிந்தார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ.பைடன் வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை அழைப்பு விடுத்தார். எனவே பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் வெள்ளை மாளிகைக்குச் சென்ற போது அமெரிக்காவின் அரசு முழு மரியாதை செலுத்தியது. அதிபர் ஜோ.பைட்டனோ தனது மனைவியுடன் சேர்ந்து நேரில் வந்து பிரதமரை வரவேற்றார். மேலும் இந்திய வம்சாவளியினர் ஆயிரம் கணக்கானோர் வெள்ளை மாளிகை வளாகத்தில் குவிந்து பிரதமர் நரேந்திர மோடி உற்சாகமாக வரவேற்றனர். இதன் பிறகு ஜோ.பைடன் மற்றும் பிரதமர் இருவரும் கலந்துரையாடினர்.
மேலும் இருவரிடையே இந்தியா மற்றும் அமெரிக்காவின் இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஆலோசனை நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி உங்களுடைய நட்புக்கு நன்றி பைடன் என்றார். இந்த வரவேற்பில் நேற்று இரவு வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. பின்னர் இருவர் தரப்பிலும் மாறி மாறி பரிசுகளை வழங்கிக் கொண்டனர். இந்த நிகழ்வின் போது இரண்டு தலைவர்களும் மது அருந்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.