50 ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம். ஜூலை 11ஆம் தேதி ஜி.எஸ்.டி கவுன்சிலின் 50ஆவது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஜி.எஸ்.டி கவுன்சிலிங் கூட்டம் டெல்லியிலுள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற உள்ளது. இந்தியாவில் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 தேதி சரக்கு மற்றும் சேவை வரி குறித்து அறிமுகப்படுத்தப்பட்டது. கடைசியாக இந்த வருடம் 2023 பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி 49ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஜூலை 11. இல் நடைபெறும் 50ஆவது ஜி.எஸ்.டி கவுன்சிலின் சிமெண்ட்டுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
மேலும் வர்த்தகம், ஆன்லைன் விளையாட்டு மீதான வரி விதிப்பு பற்றியும் ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. சரக்கு மீதான சேவை வரி, மற்றும் பயன்பாட்டு வாகனங்களுக்காக ஜி.எஸ்.டியை மறு ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஐம்பதாவது கவுன்சிலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.