தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல். இந்தியா முழுவதும் 50 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அவற்றில் 30 அரசு கல்லூரிகள், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளாகத் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 702 ஆக அதிகரிக்கும். மேலும் மத்திய அரசு ஆனது தமிழகத்தில் மூன்று புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி வழங்கி உள்ளது. சென்னை பி.எஸ்.ஜி அறக்கட்டளை, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனம், மற்றும் ஈரோடு வாய்க்காலம்பேடு நந்தா மருத்துவ கல்லூரி ஆகியவை அறக்கட்டளை சார்பில் தொடங்க மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
இதனால் மருத்துவப் படிப்பிற்கு 8195 இடங்கள் ஒதுக்கிடப்படுகிறது. நாடு முழுவதும் 2023 -2024 கல்வி ஆண்டில் மருத்துவப் படிப்பிற்கு மொத்தம் 1,07,658 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதனால் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதால் உண்மையான (எம்.பி.பி.எஸ்) மருத்துவர்கள் உருவாக்கப்படுவார்கள்.