கலைஞர் நினைவிடம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி திறப்பு சென்னை மெரினாவில் கட்டப்பட்டு வரும் கருணாநிதி நினைவிடம் ஆகஸ்ட் 7ஆம் தேதி திறக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஒரிசா விபத்து காரணமாக கலைஞர் நூற்றாண்டு விழா ஒத்திவைக்கப்பட்டு (ஜூன் 7) புதன்கிழமை சென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் அவர்கள் “முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரின் சாதனை, தமிழ்நாட்டுக்கு செய்த தொண்டுகளை பற்றியும் புகழாரம் செய்தார். திரும்பும் திசையெல்லாம் நினைவுச் சின்னங்கள் உருவாக்கிய கலைஞரின் பெயரால் மாதம் தோறும் நினைவுச் சின்னங்கள் திறக்கப்பட உள்ளன என்றார்.
மேலும் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜூன், ஜூலை மாதங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூலகம், திருவாரூரில் கலைஞர் கோட்டம் ஆகியன திறக்கப்பட உள்ளன . இதை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் கலைஞர் நினைவிடம் ஆகஸ்ட் 7 தேதி திறக்கப்பட உள்ளது என அறிவித்தார். மேலும் இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் உரைகள் அடங்கிய தொகுப்பான ‘அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே’ என்ற நூல் கலைஞரின் நூற்றாண்டு விழாவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.