ஜூலை ஏழாம் தேதி உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்பட உள்ளது. சென்னையில் அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 7 தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. உலகம் எங்கும் தமிழோசை பரவ வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். இளைஞர்களிடையே தமிழ் பண்பாடு, வளர்ச்சி, பாரம்பரியம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநாடு நடத்தப்பட உள்ளது. ஜப்பான், தென் கொரியா, பிரான்சிஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பதிவாளர்கள், அகழ்வாராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் மொழிபெயர்ப்பாளர்கள் என 200க்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில் தமிழ் தொன்மை, பாரம்பரியம், பண்பாடு, இலக்கியம் மானுடவியல் மற்றும் சமூகவியல் என்ற தலைப்புகளில் பல கட்டுரைகள் வல்லுனர்களால் சமர்ப்பிக்கபடவுள்ளது.. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற சார்பில் இதுவரை 10 மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த வருடம் நடத்தப்படும் 11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் புத்தக்கண்காட்சி, நூல்கள் வெளியிதல் நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் என நடைபெற உள்ளன. மேலும் நிகழ்ச்சி இந்த மாநாடு முடிவடையும் தருணத்தில் தமிழ் வளர்ச்சிக்கான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மு. பொன்ன வைகோ சென்னைப் பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.