தமிழ்நாடு அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக டி.ஆர்.பி ராஜா பதவியேற்றுக் கொண்டார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கவர்னர் அவர்களுக்கு டி.ஆர்.பி ராஜாவை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்னர் முதலமைச்சர் அவர்கள் கவர்னருக்கு சிறப்பு செய்யும் விதமாக பூங்கொத்து வழங்கினார்.தலைமைச் செயலாளர் அவர்கள் கவர்னர் அவர்களுக்குப் பதவியேற்பு உறுதி மொழியும் ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார் டி.ஆர்.பி ராஜா உறுதியேற்ற பின்னர் டி.ஆர்.பி ராஜாவும் கவர்னர் அவர்களும் பதவியேற்பு தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டனர்.பின்னர் கவர்னர் அனுமதியுடன் பதவியேற்பு நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் சிறப்பாக நிறைவடைந்தது.
பதவியேற்ற சிறிது நேரத்தில் அமைச்சருக்கான இலக்காக்களை ராஜ் பவன் வெளியிட்டது.டி.ஆர்.பி ராஜாவுக்கு தொழில்துறையும், தங்கம் தென்னரசுக்கு நீதி மற்றும் மனித வள மேலாண்மை துறையும், சாமிநாதன் அவர்களுக்குத் தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத் துறையும், பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்குத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையும் மற்றும் மனோஜ்தங்கராஜுக்கு பால்வளத்துறையும் வழங்கப்படுகிறது. பதவியேற்ற அமைச்சர் டி.ஆர்.ராஜா அவர்கள் முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில் எந்த ஒரு பணியாக இருந்தாலும் சிறப்பாக செயல்படுவேன் எனத் தெரிவித்தார்.