மதுரை சித்திரை திருவிழாவை முடித்துவிட்டு கள்ளழகர் நேற்று காலை அழகர் மலைக்கு வருகை புரிந்தார். மே ஐந்தாம் தேதி வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்குகினார்.வண்ண மலர் மாலைகளை பக்தர்கள் இறைவனுக்கு அணிவித்தனர்.அழகரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்.தனர் மீண்டும் ‘கோவிந்தா’ ‘கோவிந்தா’ என்ற கோசத்துடன் வழிபாடு செய்தனர்.
45க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகரை வழிபட திரளான பக்தர்கள் மலர்களைத் தூவியும் ஆரவாரத்துடன் சுவாமியைத் தரிசித்தனர். திருக்கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்ட கள்ளழகர் பிரகாரத்தில் உற்சவரை நிலைநிறுத்தம் செய்ய திரளான பக்தர்கள் கூடினர்.பக்தர்கள் கள்ளழகருக்கு பூசணிக்காயில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழித்தனர். கள்ளழகரைக் காண கோடிக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.