மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஐந்தாம் தேதி கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் என்பது தமிழ்நாட்டின் பழைமை வாய்ந்த மதுரை மாநகரில் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் திருவிழாகும். இது மதுரை மாநகரில் வீற்றிருக்கும் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணத் திருவிழாவுடன் இணைத்துக் கொண்டாடப் பெறுகிறது. இன்று அதிகாலை கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் 5:50 மணி முதல் 6:20 மணி வரை வைகை ஆற்றில் இறங்கினார்.
தினமும் காலை,மாலை சுவாமி வீதி உலா வருகிறார். மே இரண்டாம் தேதி திருக்கல்யாணம், மூன்றாம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டமும், மே நான்காம் தேதி சித்திரை கோயில் திருவிழா நிறைவு பெறுகிறது. அடுத்த நாளில் கள்ளழகர் அலங்காரத்துடன் மதுரையை வலம் வருகிறார் மே ஐந்தாம் தேதி வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்.வண்ண வண்ண மலர் மாலைகளை பக்தர்கள் இறைவனுக்கு அணிவித்தனர்.சித்ரா பெளர்ணமி தினத்தில் கள்ளழகர் தனது சகோதரி மீனாட்சி அம்மனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்தார். இன்று அதிகாலை 5.50 மணி முதல் 6.20 மணி வரை கோலாகலமாக நடைபெற்ற கள்ளழகரின்அழகைக் காண கோடிக்கணக்கான பக்தர் கூட்டம் கூடியது.