பொன்னியின் செல்வன் மணிரத்தினம் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இரண்டு பாகங்களாக உருவானது. பொன்னியின் செல்வன் பாகம்1 கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தைத் தொடர்ந்து பொன்னின் செல்வன் பாகம் 2 ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மிகுந்த எதிர்ப்பார்புகளுடன் வெளியானது. அருண்மொழிவர்மன் இறந்துவிட்டானோ என்ற செய்தியோடு பாகம் -1 நிறைவடைந்த நிலையில், அருண்மொழி வர்மன் உயிரோடுதான் இருக்கிறான் என பாகம் -2 தொடங்குகிறது. சோழ குலத்தை அழிக்கச் சபதமேற்கும் நந்தினி யார், அவளின் சபதம் ,சுந்தர சோழன் குடும்பம், பாண்டிய ஆபத்துதவிகள் அழிக்கப்பட்டார்களா போன்ற கேள்விகளுக்கு விடைகள் சொல்கிறது இரண்டாம் பாகம்.
முதல் பாகத்தைவிட ஜெயம் ரவியின் பாத்திரத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஏ ஆர் .ரஹ்மானின் பின்னணி இசை படத்திற்குக் கூடுதல் பலம்சேர்த்திருக்கிறது. ரவிவர்மனின் ஒளிப்பதிவு பல காட்சிகளைக் கவிதையாக்கியிருக்கிறது. நந்தினி – ஆதித்த கரிகாலனுக்கு இடையிலான காதல் காட்சிகள் படத்தில் மகுடமாக மாறியிருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத்தின் பங்கு சிறப்பாக வெளிப்படுகிறது. மொத்தத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரேட்டிங்கில் 4 நட்சத்திரப் புள்ளிகள் பெற்று மக்கள் மத்தியில் வெற்றிநடை போடுகிறது.