நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் வெகு விரைவில்!

நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் வெகு விரைவில்!

நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் எனப் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், கதாநாயகி ப்ரித் சிங் , மற்றும் ரவிக்குமார் இயக்கத்திலும், ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் உருவாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான ‘வேற லெவல் சகோ ‘எனும் பாடல் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் அன்று படக்குழுவினரால் வெளியானது. படத்தில் யோகி பாபு ,பால சரவணன், இஷா கோபிகா மற்றும் கருணாகரன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வேற்றுக்கிரகவாசியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாக உள்ளது. அயலான் படத்தை 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே. கே.ஆர் ஸ்டூடியோ இணைந்து தயாரித்துள்ளது. 75 விழுக்காடு படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்ட நிலையிலும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். , இப்படம் தமிழ் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் எனப் பல மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில்        அதிகளவில் கிராபிக்ஸ் காட்சிகளும், 4500 க்கு மேற்பட்ட வி எஃப்.எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய லைவ் ஆக்சன் திரைப்படமாக  உருவாக்கபட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த இப்படம் வருகிற 2023 ஆண்டு தீபாவளி (நவம்பர் 12)அன்று ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன்  வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related post

ஜெயம் ரவியின் பிரதர்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்!

ஜெயம் ரவியின் பிரதர்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்!

நடிகர் ஜெயம் ரவியின் பிரதர்ஸ் திரைப்படம் தீபாவளி தினத்தன்று ரிலீஸ்! பிரதர்ஸ் திரைப்படத்தை எம். ராஜேஷ் இயக்கியுள்ளார்.இந்தத் திரைப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.சரண்யா பொன்வண்ணன், பூமிகா, விடிவி…
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் முழுவதும் மக்கள் ஷாப்பிங்!

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் முழுவதும் மக்கள் ஷாப்பிங்!

 சென்னை தி.நகர், ரங்கநாதன் தெருவில் ஜவுளி கடைகளில் புதிய ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க மக்கள் திரண்டனர். அதேபோல சென்னை தீவுத்திடலில் அமைக்கப் பட்டுள்ள பட்டாசு கடைகளில்…
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன!

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை (அக்டோபர் 31 )வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை அடுத்து வெள்ளி ,சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் வருவதால் மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக சிறப்பு…