சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த 200க்கும் மேற்பட்ட மாணவிகள் அங்கு பணிபுரியும் உதவிப் பேராசிரியர்கள் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி புகார் அளித்திருந்தனர். பலமுறை கல்லூரி இயக்குனரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தானாகவே முன்வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் மூலம் தேசிய மகளிர் ஆணை தலைவி. ரேகா ஷர்மா மற்றும் மாநில மகளிர் ஆணை தலைவி குமாரி ஆகியோர் மாணவிகளிடையே விசாரணையை நடத்திய பொழுது குற்றச்சாட்டுகள் உறுதியானதால், தவறு செய்த யாராக இருந்தாலும் அவர் மீது உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார். இதனை அடுத்து மாணவிகள் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் அளித்துள்ளனர். 2008 இல் இருந்து உதவிப்பேராசிரியர் பத்மன் உள்பட நான்கு பேர் மாணவியர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்தனர். பின்னர் ஹரி பத்மன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் காரணமாக பாலியல் புகார் பற்றி கலாஷேத்ரா கல்லூரி மாணவர்கள் புகார் அளிக்க சிறந்த இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்க விருப்பமுள்ள மாணவர்கள் http://www.reachoutsupport.co.in/என்ற இணையதளம் முகவரியில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .