வாட்டர் மெட்ரோ நீர்வழிப் போக்குவரத்தினைப் பிரதமர் மோடி ஏப்ரல் 25 ஆம் தேதி திறந்து வைக்கிறார். கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையைக் கொடி அசைத்து கேரளா நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ சேவையைத் தொடங்கி வைக்கயுள்ளார். இந்த நீர்வழிப் போக்குவரத்தான வாட்டர் மெட்ரோ படகு சேவை மெட்ரோ ரயில் போலவே திட்டமிடப்பட்டு,கண்ணாடியால் மூடப்பட்டு முழுவதும் குளிரூட்டப்பட்ட எலக்ட்ரிக் படகுகளாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் வழி படகு போக்குவரத்து கொச்சி மெட்ரோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.இந்த வாட்டர் மெட்ரோ 1,137 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாட்டர் மெட்ரோ படகிலும் 100 பேர் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.. இந்த வாட்டர் மெட்ரோ சேவையில் ரூ20 முதல் ரூ 40 வரை குறைந்த கட்டணத்தில் வசுலிக்கப்படுகிறது. தினசரி காலை 7 மணி முதல் இரவு 8மணி வரை இயக்கப்பட உள்ளது. இந்த சேவையானது மொத்தம் 75 கி மீ தூரத்தை இணைக்கும் வகையில் 15 வழி இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வாட்டர் மெட்ரோசேவையை(Kochi 1)என்ற மொபைல் ஆப் மூலம் பயன்படுத்தலாம்.இந்த நீர்வழிப் போக்குவரத்து சுற்றுலா பயன்பாட்டுக்கும் , தினசரி போக்குவரத்திற்கும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது..