ஐ.பி.எல் தொடரில் 27ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையேயான போட்டிகளில் டாஸ் வென்றது பஞ்சாப் அணி. இந்தப் போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டனான பாஃப்டு பிளெசீவிற்கு காயம் ஏற்பட்டதால் பேட்டிங் மட்டும் ஆடும் நிலையில் இருந்தார். அதன் காரணமாக கேப்டனான பாஃப்டு பிளெசீன் இம்பேக்ட் ப்ளேயராக விராட் கோலி ரன்களை ஸ்கோர் பண்ணுவதில் குறிக்கோளாக இருந்தார். இவ்விருவரும் இணைந்து ஆட்டத்தை அசத்தலாக்கினர். போட்டியைத் தொடங்கிய பெங்களூர் அணியின் விராட் கோலி அசத்தலான அரை சதங்களை அடித்தார். விராட் கோலி 59 ரன்களிலும், பாஃப்டு பிளெசீன் 84 ரன்களிலும் ஆட்டத்தினை இழந்தனர். பெங்களூர் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளுடன் 174 ரன்களை எடுத்தது.
175 ரன்கள் அடைய வேண்டும் என்ற இலக்கினை நோக்கி விளையாடத் தொடங்கிய பஞ்சாப் அணி ஆட்டத் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்தது.. பெங்களூர் அணியின் முகமது சிராஜ் நான்கு பேரின் விக்கெட்டை கைப்பற்றியதுடன் ஒரு ரன் அவுட்டும் செய்து அசத்தி 18.2 ஓவரில் பஞ்சாப் அணியை வீழ்த்தினார்அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பஞ்சாப் அணி 150 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது. பெங்களூர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!