நாடாளுமன்றத்தில் 2024-25 ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தொடரை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்திய மக்கள் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் மோடி அரசின் நோக்கம் என்று நிர்மலா சீதாராமன் தொடங்கினார்.அனைவருக்கும் வீடு, குடிநீர் என்ற திட்டத்தின் மூலம் இந்திய அரசு ஒரு புரட்சியைக் கண்டுள்ளது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்த 25 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றார் . வீடுகளில் சோலார் மின் தகடுகள் அமைக்கப்படுவதன் மூலம் நடுத்தர குடும்பத்தினர் 15000-18 000 ரூபாயாக வருவாய் ஈட்ட முடியும் , நாடு முழுவதும் 41,000 ரயில் நிலையங்கள் வந்தே பாரத் ரயில் உயர்த்தப்படும். நாடு முழுவதும் விமான நிலையங்களின் எண்ணிக்கை 14 9 மாக இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
மேலும் உள்நாட்டு பயணிகளின் விமான சேவைக்காக புதிதாக 1000 விமானங்களுக்கு வாங்கப்பட உள்ளது. “3 கோடி பெண்கள் லட்சாதிபதி ஆக்க மோடி அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது , 9 முதல் 16 வயது பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் தடுப்பூசி போடப்படும் “. என்றும் தெரிவித்தார் மேலும் மீன் உற்பத்தி அதிகரிக்க ஐந்து புதிய அக்குவா பார்க் அமைக்கப்படும் .சுற்றுலா துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முக்கியத்துவம் அளிக்கப்படும், இரண்டு கோடி பேருக்கு வீடு கட்ட இலக்கு உள்ளதாகவும் , 10 ஆண்டுகளில் 15 எய்ட்ஸ் அமைப்பு அமைக்கப்படும் என்றார் , மேலும் மோடி அரசால் பத்தாண்டுகளில் இந்திய பொருளாதாரமே அதிவேகமாக வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.