7-ஆவது இந்தியா மொபைல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். புதுடெல்லியில் பிரகதி மைதானத்தில் பாரத் மண்டபத்தில் (அக்டோபர் 27 )இன்று காலை 9. 45 மணிக்கு 7-ஆவது மொபைல் மாநாட்டினை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 100 5 ‘ஜி பயன்பாட்டு ஆய்வகங்களை வழங்கினார். ‘உலகளாவிய டிஜிட்டல் கண்டுபிடிப்பு ‘ கருப்பொருளோடு இந்த மாநாடு தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் 250 கண்காட்சியாளர்கள், 400 புது தொழில் நிறுவனங்கள், 22 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தற்போது இந்தியாவில் 5 ஜி பயன்பாடு விரிவுபடுத்தப்படுகிறது.மேலும் இந்த மாநாட்டில் 6 ஜி பயன்பாட்டுக்கான முன்னேற்பாடாக இந்திய மொபைல் மாநாடு வழிவகுக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.