தமிழகத்தில் ஜூலை 17 கோவை மேட்டுப்பாளையத்தில் சாய்பாபா கோவில் அருகே உள்ள புதிய பேருந்து நிலையத்தில் 20 புறநகர் பேருந்துகளைத் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார் .இந் நிலையில் செய்தியாளர்களிடம் “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் பழைய பேருந்துகள் மாற்றி அமைக்கப்பட்டு, புதிய பேருந்துகளை இயக்க முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார்.
மேலும் பயன்பாட்டுக்கு மின்சாரத்தில் இயங்கும் 500 பேருந்துகள் வாங்குவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது , இதற்காக 100 பேருந்துகளுக்கான டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது.விரைவில் டெண்டர் முடிக்கப்பட்டு முதல் 100 பேருந்துகள் சென்னை பெருநகரங்களிலும், அடுத்த 400 பேருந்துகள் கோவை, மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.